ராஜினாமா முடிவை திரும்பப்பெற வற்புதுத்துவோம் பாஜகவில் இருந்து விலகும்முடிவை எடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனதை மாற்றுவோம் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பாஜக. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கின் வீட்டிற்கு முரளிமனோகர் ஜோஷி, வெங்கய்யா நாயுடு, சுஷ்மாசுவராஜ் ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பின்போது அத்வானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ராஜ்நாத்சிங்கிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ராஜ்நாத்சிங் வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மாசுவராஜ், ‘நாங்கள் அனைவரும்சென்று அத்வானியை சந்திக்கவுள்ளோம். ராஜினாமாமுடிவை திரும்பப்பெற வேண்டும் என அவரை வற்புதுத்துவோம்’ என்று கூறினார்.

Leave a Reply