மக்களவைதேர்தலில் பாஜக.வுடன் கூட்டணியமைக்க தயார் வரும் மக்களவைதேர்தலில் பாஜக.வுடன் கூட்டணியமைக்க தயார் என்று எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதாகட்சி அறிவித்துள்ளது. கர்நாடக பாஜக.வில் இருந்து விலகி தனிகட்சி தொடங்கிய அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடந்த சட்ட சபை தேர்தலில் தனித்துநின்று போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் நரேந்திரமோடிக்கு பாஜக.வில் முக்கியபதவி கொடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து எடியூரப்பா மீண்டும் பாஜக.,வில் இணைவார் என யூகங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரும் மக்களவைதேர்தலில் பாஜக.வுடன் கூட்டணி அமைக்கதயார் என்று கர்நாடக ஜனதா கட்சியின் செய்திதொடர்பாளர் தனஞ்செய்குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம் கர்நாடக ஜனதாவை பாஜக.வுடன் இணைக்கும்திட்டம் ஏதுமில்லை என்றும் அவர்தெரிவித்தார். கூட்டணிகுறித்து பாஜக மேலிடம் தான் முடிவுசெய்யும். மேலும் கூட்டணிபேச்சுவார்த்தை தொடர்பாக எடியூரப்பாவிடம் இருந்து அழைப்பு ஏதும்வரவில்லை என்று கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஒருவர்கூறினார்.

Leave a Reply