மோடியின் எழுச்சி காங்கிரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரதமர்வேட்பாளர் யார் என்பதை பிரச்னையாக்கி பா.ஜ.க.,வுக்கு நெருக்கடி அளிக்க முயற்சிநடக்கிறது என அக்கட்சியில் மூத்த தலைவர் யஷ்வந்த்சின்ஹா கூறியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பா.ஜ.க.,வின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டார். இதையடுத்து பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் யார் என்று கேள்வி கட்சிக்கு நெருக்கடி அளிக்க முயற்சிநடக்கிறது.ஆனால் பிரதமர்வேட்பாளர் குறித்து பா.ஜ.க எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் பா.ஜ.க.,வுக்குள் பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்றே அக்கேள்வி மீண்டும், மீண்டும் எழுப்பப்படுகிறது என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒருகேள்வி எழுப்பப்படாததை சுட்டிக்காட்டிய சின்ஹா, “பாஜக தலைவர்கள் அனைவரிடம் பிரதமர்வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அவர்களில் எவராவது வாய்தவறி ஏதாவது கூறிவிட மாட்டார்களா? என்பது தான் இக்கேள்வியின் நோக்கம்.காங்கிரஸ்கட்சி சார்பில் பிரதமர் மன்மோகன்சிங்தான் மீண்டும் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது ராகுல்காந்தி, ஏ.கே. அந்தோணி, திக்விஜய்சிங் ஆகியோரில் எவராவது பிரதமர்வேட்பாளர் ஆவார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க.,வில் நரேந்திரமோடி தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது தொடர்பாக சின்ஹாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மோடி தேசியஅளவில் பிரபலமான தலைவராக உருவாகி வருகிறார். அதேநேரத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளார்கள். ஆனால் கட்சிதான் இறுதிமுடிவை எடுக்கும்.மோடியின் எழுச்சி காங்கிரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Leave a Reply