இஸ்லாம் இவர்களுக்கு கற்பித்தது இதுதானா? சுடுவதற்கும், கொல்வதற்கும்–விதிவிலக்குகளே இல்லாதவர்கள்தான் தலிபான்கள்..தாயை கொல்வார்கள்– தனயனை கொல்வார்கள்–,பக்கத்தில் உள்ளவர்களை கொல்வார்கள்.–.நண்பனை கொல்வார்கள்–.நல்லவன் என்பதை பார்க்காமல் — கொல்வார்கள்.

இன்று (24.6.13) பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள– பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மலை சிகரம், உலகின் 6 வது பெரிய மலை சிகரம் "நங்க பர்வத்" தில் சாதனை படைக்க –மலைஏற இருந்த வெளிநாட்டு மலை ஏறும் குழுவைச்சார்ந்த 10 பேரை– ஈவு இரக்கமின்றி தலிபான் கள் கொன்று குவித்திருக்கிறார்கள்.

இவர்கள் அனவரும், ரஷ்யா, சீனா, மற்றும் நேபாள், அமெரிக்காவை சேர்ந்தவர்கள். 8120 மீட்டர் உய்ரமான இச்சிகரத்தின் 4000 மாவது மீட்டர் உய்ரத்தில் இருந்த "கேம்பில்" முகாமிட்டுருந்த மலை ஏறும் குழுவினரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கிறார்கள்..

இதே மாதிரி எவ்வளவோ கொலை சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த கொலைகள் வித்தியாசமானது ..எங்கோ நடுக்காட்டிலே– மலை சிகரத்திலே– சாதனை புரிய– மலை ஏறிக்கொண்டிருக்கும்– வெளி நாட்டு மலைவீரார்களை கொல்வது என்பது– ரத்தம் உறையவைக்கும் கொடுமையான செயல்..

தலிபான்களுக்கு இது புதிதல்ல.

2001 ஆம் ஆண்டு மார்ச் 12 ந்தேதி ஆஃப்கானில், காபூலில் இருந்த 2000 ஆண்டு பழமையான புத்தர் சிலைகள் இரண்டை துப்பாக்கியால் சுட்டும் வெடி வைத்தும் தகர்த்தார்கள். உலகநாடுக ள் வேண்டுகோள் விடுத்தும் ஏற்க மறுத்து புராதன பௌத்த சிலைகளை குண்டுவைத்து முடித்தார்கள்…

மனிதர்களை , மாற்றுமத சின்னங்களை, பெண்களை,விளையாட்டு வீரர்களை, கொன்று குவிப்பதைத்தான், இஸ்லாம் இவர்களுக்கு கற்பித்ததோ..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply