பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக யூகங்களை வகுக்கும் பாஜக  பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வின் தேசிய பிரச்சாரகுழு தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் பாராளுமன்ற தேர்தல்வெற்றிக்காக யூகங்களை வகுத்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நரேந்திரமோடி தலைமையில் பிரச்சார குழுவின் முதல் ஆலோசனைகூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் எந்தெந்த மாநிலங்களில் எத்த வகையான பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது . பாஜக. பேச்சாளர்கள், மக்கள்மனதில் பதியும் வகையில் எதையெல்லாம் பேசவேண்டும் என்பதும் இன்றைய கூட்டத்தில் வரையறுக்கப்படவுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் பொருளாதார சீர்கேடுகள், விலைவாசிஉயர்வு, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளை மக்கள் உணரும் வகையில் பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

மேலும் 300 தொகுதிகளில் வெற்றிபெறும் வகையில் யூகத்தை அமைத்திட பாஜக. முடிவுசெய்துள்ளது. கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதிகள், குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் ஆகிய தொகுதிகளில் அதிக கவனம்செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே இணையதளங்கள் மூலமாக பிரச்சாரங்களை தீவிரப்படுத்த மோடி ஏற்பாடுகள் செய்துவருகிறார். இணையதள வாடிக்கையாளர்களை புதுமையான ஆன்லைன்பிரச்சாரம் மூலம் கவர மோடி வியூகம் அமைத்துள்ளார். மோடியின் இத்தகையதிட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வந்ததும் பாராளுமன்ற தேர்தல்பிரச்சாரம் மேலும் சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply