மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் ஏன்? உணவுபாதுகாப்பு அவசர சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன. உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அவசரசட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்வழங்கியது.

இந்த அவசரசட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. முக்கியமான திட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து நிறைவேற்றாமல் அவசரசட்டம் கொண்டுவருவது சரியல்ல என்று ஐக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா மத்திய அரசின் முடிவு பெரும்வியப்பை தருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உணவு பாதுகாப்பு சட்டமசோதாவை அவசரசட்டமாக நிறைவேற்றுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் கொண்டுவர அவசியம் ஏன்? என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அவசரசட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்நடத்த மத்திய அரசு முயற்சி செய்துவருதாக அவர் குற்றம்சுமத்தினார்.

Leave a Reply