தனிதெலங்கானாவை உருவாக்குவதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது தனிதெலங்கானாவை உருவாக்கும் விவகாரத்தில் பா.ஜ.க உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பாஜக.,வின் செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் ஆளும் காங்கிரஸ்அரசு, தெலங்கானாவை அமைத்து தருவதாக தெரிவித்து, காலம்தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து சுதான்ஷு திரிவேதி மேலும் கூறியதாவது:

தனி தெலங்கானாவை ஏற்படுத்தித்தருவதில் பா.ஜ.க உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. இக்கருத்தை 2006-ம் ஆண்டு ஆந்திரமாநிலம் மெஹ்பூப் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று , 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்பிரசாரத்தில், “பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் உத்தரகண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைப்போல தெலங்கானாவும் தனிமாநிலமாக பிரிக்கப்படும்’ என்று அத்வானியும் கூறியுள்ளார் என்று திரிவேதி சுட்டிக்காட்டினார்.

Leave a Reply