ஒடிஷாவுக்கும் குஜராத்துக்கும் ஒற்றுமை உண்டு. இன்று குஜராத் மாநிலம் வளர்ந்துள்ளது எனில் என்னுடைய ஒடிஷா சகோதரர்களால் தான் என அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடி ஒடிஷா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒடிஷா தலைநகர் புவனேஸ்வர் சென்றடைந்த நரேந்திரமோடியை அம்மாநில பா.ஜ.க மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சாலைவழியாக அவர் பூரிக்கு காலை 10.50 மணிக்குசென்றார். அங்கு பாலபத்ரா, சுவப்தரா ஆலயத்தில் வழிபாடுநடத்தினார். பின்னர் பூரிஜெகந்நாதர் ஆலயத்தில் சிறப்புவழிபாடு செய்தார். அப்போது உத்தர்காண்ட் வெள்ளத்தில் இறந்தோரின் ஆத்மாசாந்தியடைய மோடி பிரார்த்தித்தார். பின்னர் கஜபதிமஹாராஜா அரண்மனையில் மன்னர் கஜபதி திக்திவ்ய சிங் தேவை சந்தித்தார். அதைத்தொடர்ந்து கோபர் தான் மடத்தில் பூரி சங்கராச் சாரியாரிடம் மோடி ஆசிபெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஒரியமொழியிலேயே பேசிய மோடி, சோம்நாத் மண்ணில் இருந்து பூரிபுனித தலத்துக்கு ஜெகநாதரின் ஆசியைப்பெறுவதற்காக வந்துள்ளேன். இந்த இடத்தை நான் போற்றிவணங்குகிறேன். இன்று குஜராத் மாநிலம் வளர்ந்துள்ளது எனில் என்னுடைய ஒடிஷா சகோதரர்களால் தான். அவர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக பாடு படுகின்றனர். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். குஜராத்துக்கும் ஒடிஷாவு க்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. ஒடிஷாவின் கோனார்க்கில் சூரியகோயில் உள்ளது. கிழக்கில் உதயமாகும்போது முதலில் சூரியகதிர்கள் அக்கோயிலை தழுவிச் செல்லும். மாலையில் மேற்கில் சூரியன் மறையும்போது குஜராத்தின் மோதெராவில் சூரியக்கதிர்கள் பட்டு மறையும் என்றார். நரேந்திர மோடி ஒரிய மொழியிலேயே பேசினார் இதை கண்டு அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் உட்பட பலரும் கைதட்டி ஆரவாரம்செய்தனர்.

Leave a Reply