பீகாரில்   குழந்தைகள் பலியான சம்பவம் கொந்தளிப்பில் மக்கள் பீகாரில் மதிய உணவுசாப்பிட்ட குழந்தைகள் பலியானசம்பவம் அம்மாநில மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவுசாப்பிட்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்திருக்கும் நிலையில், மருத்துவமனையில் சோக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் குழந்தைகளுக்கு

போதியகவனிப்பு இல்லை என்றும் . உயிரிழந்த குழந்தைகள் சிலரின் உடல்களை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தசம்பவம் நடந்த இரண்டு நாட்கள் ஆகியும் முதல்வர் நிதிஷ்குமார், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல்கூற செல்லாதது அம்மாநில மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த நடவடிக்கையை அரசியல்கட்சிகளும் கண்டித்துள்ளன. இதனிடையே குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவுபொருட்கள் நச்சு தன்மைகொண்ட எண்ணெய் மூலம் சமைக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .

Tags:

Leave a Reply