இந்தியாவை வழிநடத்துவதற்கு பொருளாதாரமேதை தேவையில்லை பிரதமர்பதவிக்கு உண்மையான ஒருவர் தான் தேவை, இப்போதைய பிரதமர் சிறந்தபொருளாதார மேதை. இந்தியாவை வழிநடத்துவதற்கு பொருளாதாரமேதை தேவையில்லை என்று பா.ஜ.க.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

தில்லியில் அசோசேம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியதாவது:

சர்வதேசளவில் அனைத்துவகையிலும் இந்தியா மீதான நம்பகத் தன்மை குறைந்துவருகிறது. இந்தநிலை ஏற்பட்டதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே முக்கியகாரணம்.இந்தியா பொருளாதாரவளர்ச்சியில் சிறந்துவிளங்க வேண்டுமானால், சர்வதேச அளவில் இந்தியாமீதான நம்பகத் தன்மை அதிகரிக்க வேண்டுமானால், திடமான நம்பிக்கையும், தொலை நோக்கு பார்வையும் கொண்ட ஒருவர் தான் பிரதமராகவேண்டும். இத்தகைய குணம்கொண்ட ஒருவரால் மட்டுமே வளமான இந்தியாவை உருவாக்கமுடியும்.

இப்போதைய பிரதமர் சிறந்தபொருளாதார மேதை. இந்தியாவை வழிநடத்துவதற்கு பொருளாதாரமேதை தேவையில்லை, உண்மையான ஒருவர் தான் பிரதமராக வேண்டும்.முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பொருளாதாரமேதை இல்லை, ஆனால் அவர் ஒரு உண்மையான தலைவராக விளங்கினார். நாட்டின் உண்மை தன்மையை நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டார்.நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மனஉறுதியும், திடமான நம்பிக்கையும்கொண்ட தலைவர் தேவை. இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உரையின் சிறுபகுதியை இன்று கேட்டேன். அவரது உரையில் மன உறுதியையும், திடமான நம்பிக்கையையும் காணமுடியவில்லை.

இப்போது மட்டும் அல்ல, பிரதமராக பொறுப்பேற்றது முதலே இப்படித் தான் உள்ளார். ஐ.மு., கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது 100 நாள்களில் விலைவாசி குறைக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். பிறகு ஆறு மாதத்தில் குறைக்கப்படும் என்றார். இப்போது அதுபற்றிபேசுவதை நிறுத்திக்கொண்டார் என்றார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply