இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள் இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பா.ஜ.க தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் . முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டுவாசலில் கொடூரமாக வெட்டி படுகொலைசெய்துள்ளது அதிர்ச்சி தருகிறது . இந்தப்படுகொலை கடும் கண்டனத்துக் குரியது.தமிழகத்தில் கடந்த ஓராண்டில்மட்டும் பா.ஜ.க மாநில மருத்துவ அணிச்செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பரமக்குடி நகராட்சி முன்னாள்கவுன்சிலர் முருகன், ஆடிட்டர் ரமேஷ் என்று பலர் வெட்டி கொல்லப் பட்டுள்ளனர். பா.ஜ.க மூத்த தலைவர் எம்ஆர். காந்தி. மாநில துணைத்தலைவர் எச். ராஜா, ஆர்எஸ்எஸ். மாவட்டத் தலைவர் ஆனந்த். இந்து முன்னணி நிர்வாகி ஹரி, ஆர்எஸ்எஸ். முழுநேர ஊழியர் பாஸ்கர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். கடந்த ஆண்டு ரதயாத்திரையின் போது அத்வானியை கொல்ல முயற்சிநடந்தது.

இந்து அமைப்புகளின் தலைவர்களை அச்சுறுத்துவதன் மூலமாக அதன் செயல்பாடுகளை முடக்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த தொடர் படுகொலைகளை நடத்திவருகின்றனர். முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் உடலில் 17 இடங்களில் வெட்டியுள்ளனர்.ஏற்கெனவே ரமேஷின் கார் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இது போன்ற சம்பவங்களுக்கு பல்வேறுபெயர்களில் இயங்கிவரும் அடிப்படைவாத அமைப்புகளே காரணம். அவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்.முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும்தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எங்களின் கோரிக்கையை ஏற்று இந்தப்படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திவந்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி.இந்த தொடர்படுகொலைகளை கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 22) முழு அடைப்புபோராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply