பாஜக., இந்து அமைப்பினருக்கு போலிஷ் பாதுகாப்பு சேலத்தில் மாநில பாஜக. பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். யாரிடம் இருந்தும், எந்தவித அச்சுறுத்தலையும் இதுவரை எதிர்கொள்ளாத அவர் மிகமிக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை

எழுப்பியுள்ளது. இதில் உண்மையை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த 1980களில் இருந்து பாஜக மற்றும் இந்து அமைப்பைச்சேர்ந்த தலைவர்கள் மர்மமானமுறையில் படுகொலை செய்யப்படுவதையும் , இதில் தீவிரவாத அமைப்புகளுக்கு உள்ள தொடர்பையும் . இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக முழு அடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு இந்தவிவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் பாஜக. மற்றும் இந்துஅமைப்புகளில் உள்ள எந்தெந்த தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற ரகசியகணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக உளவுத் துறையின் சிறப்புப்படை ஒன்று இந்த கணக்கெடுப்பை நடத்தி பட்டியல் தயாரித்துள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்குமாவட்டங்களில் உள்ள இந்துமத தலைவர்களுக்குதான் அதிகபட்ச அச்சுறுத்தல் இருப்பது உளவுப்படை திரட்டிய தகவல்களில் தெரியவந்தது. அந்தபட்டியலை தமிழக அரசிடம் உளவுத்துறையினர் கொடுத்தனர்.

அந்தபட்டியலில் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் சுமார் 100 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் பாஜக , இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ். மற்றும் பல்வேறு இந்துமத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள பா.ஜ.க தேசியசெயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன் வீட்டுக்கு 24 மணிநேரமும் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 போலீசார் பணியமர்த்த பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் அவர்செல்லும் இடங்களுக்கு கூடவே ஒருபோலீஸ்காரர் செல்கிறார்.

மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு க்கு போலீஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் மாநில துணைதலைவர் சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் நரேந்திரன், மூத்த தலைவர் எம்ஆர்.காந்தி, மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம்.

ஆர்எஸ்எஸ். நிர்வாகி பக்தவத்சலம், விஜய பாரதம், ஆசிரியர் வீரபாகு, இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் துரைசங்கர், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் முருகானந்தம், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோருக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய தலைவர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங் கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அச்சுறுத்தல்பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 100 பேருக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் பெரும் பாலனாவர்கள் “ஏ” பிரிவில் வருகிறார்கள். அதன்படி இவர்களுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்படும்.

40 சதவீதம் பேர் ‘பி’ பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள்வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மட்டும் போலீஸ்பாதுகாப்பு அளிக்கப்படும். இந்துமுன்னணி தலைவர் ராம கோபாலன் மற்றும் சில பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ‘ஒய்’ பிரிவில் இருப்பதால், அவர்களுடன் எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் உடன் இருப்பார்கள்.

Tags:

Leave a Reply