லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்று சாதனை படைக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைப்பெற்று சாதனைபடைக்கும். ஜாதி அடிப்படையில், ஆர்எஸ்எஸ்., அமைப்பு எந்தவிதமான பாரபட்சமும் காட்டாததே, பா.ஜ., கட்சி அரசியல் ரீதியாக, மிகப் பெரிய வளர்ச்சி அடையக்காரணம். என அக்கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக , தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முன்னணியின், தேசியசெயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது இந்த கூட்டத்தில்பேசிய, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது: லோக்சபாதேர்தலில் பாஜக வரலாற்று சாதனை வெற்றியை பதிவுசெய்து ஆட்சியைகைப்பற்றும். ஊடகங்களில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் சாதகமாக உள்ளன.

நாடுமுழுவதும் பாஜக.,வுக்கு ஆதரவான மனநிலை மக்களிடம் உள்ளது. ஊழல் மற்றும் தவறான ஆட்சிநிர்வாகத்தால் காங்கிரஸ் நிச்சயம் படுதோல்வியை சந்திக்கும் . காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். காங்கிரசின் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடையே கொண்டுசெல்வதே எமதுபணியாக இருக்க வேண்டும்.

6 மாநில சட்டசபைத்தேர்தல் மற்றும் லோக்சபாதேர்தல் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடைபெறும். ஆனால், இந்த அரசு தேவையா வேண்டாமா? என்பதை முடிவுசெய்ய முன்கூட்டியே தேர்தலை நடத்தவேண்டும்

சங்பரிவார் அமைப்பான, ஆர்எஸ்எஸ்., ஒருபோதும், ஜாதியை ஏற்று கொண்டதில்லை. சமூகத்தின் அனைத்துபிரிவினரும், சமமே என நம்புகிறது. ஒருமுறை வார்தாவில் நடைபெற்ற, ஆர்எஸ்எஸ்., கூட்டத்திற்கு, மகாத்மாகாந்தி விஜயம்செய்தார். அப்போது, பல்வேறு ஜாதியினரும், ஒன்றாக அமர்ந்து, உணவருந்தியதை கண்டு, வியப்படைந்தார். ஜாதியினர் மத்தியில் நடக்கும் அத்து மீறல்கள் காரணமாக, இந்து மதத்திலிருந்து, பிறமதத்திற்கு மாறுவது நிகழ்கிறது. ஜாதி அடிப்படையில், ஆர்எஸ்எஸ்., அமைப்பு எந்தவிதமான பாரபட்சமும் காட்டாததே, பா.ஜ., கட்சி அரசியல் ரீதியாக, மிகப் பெரிய வளர்ச்சி அடையக்காரணம். அதனால், தலித்மக்கள் ஏராளமானோர், பா.ஜ.க., பக்கம் வந்தனர்; அதற்கு ஆதரவுதந்தனர் என்றார்.

Leave a Reply