தெலுங்கானா தேர்தல் ஆதாயத்திற்க்கான அவசர முடிவு  தெலுங்கானா தனிமாநில அறிவிப்புக்கு எதிராக, ஒய்எஸ்ஆர்., காங்கிரசைச்சேர்ந்த, ராஜமோகன்ரெட்டி என்ற எம்.பி.,யும், ராஜினாமா செய்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் என்று கூறியதோ அன்று முதல் நாடு முழுவதும் பிரிவினை கோஷம் ஏல தொடங்கி விட்டது.

இந்நிலையில் பாஜக., மூத்த தலைவரும், ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவருமான, அருண்ஜெட்லி இது குறித்து மேலும் கூறியதாவது: தெலுங்கானா என்பது, மிகமுக்கியமான பிரச்னை. சமீபகாலமாக நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில், தெலுங்கானாவுக்கு முக்கிய இடமுண்டு. தெலுங்கானா மற்றும் தெலுங்கானா அல்லாத பிறபகுதிகளை சேர்ந்த மக்களை அழைத்துபேசி, இந்த பிரச்னைக்கு, முன்கூட்டியே, மத்திய அரசு தீர்வுகண்டிருக்க வேண்டும். இப்போது, தேர்தல் ஆதாயத்திற்காக , காங்கிரஸ் கட்சி இந்தவிஷயத்தில் அவசரமாக முடிவை அறிவித்துவிட்டது என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply