பாட்லா என்கவுன்ட்டர் போலி மதசார்பின்மை வாதிகளுக்கு  விழுந்த அடி இந்த நாள் டில்லி போலிசின் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாள் .இந்தியன் முஹஜ்டீன் தீவிரவாதி சாசாத் அஹ்மத் போலீஸ் அதிகாரி மோகன் ஷர்மாவை கொன்ற வழக்கில் தீவிரவாதி என்று தீர்ப்பு வழங்கி உள்ளது .அஹமத் தனது துப்பாகியால் போலீஸ் கான்ஸ்டபிலான பல்வான்ட் சிங்க் ,ராஜ்பீர் சிங்க் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷர்மா ஆகியோரை சுட்டு கொன்றுள்ளார் என்று

நீதிபதி ராஜேந்திர குமார் சாஸ்த்ரி தெரிவித்துள்ளார் .கொலை குற்றம் கொலை மயற்சி மற்றும் அதிகாரிகளை பணியை செய்ய விடாமல் செய்ததற்காகவும் குற்றம் நீரூபிக்க பட்டுள்ளது

இந்த சம்பவத்தை டில்லி போலீஸ் கமிசனர் நீராஜ் குமார் அனைத்து பொய் பிரசாரங்களும் முறி அடிக்கப்பட்டு விட்டதாகவும் , டில்லி போலீசாருக்கு இது பெருமை தர கூடிய விஷயம் என்று கருத்து தெரிவித்து உள்ளார் .தீவிர வாதிகளுடன் நேரடியாக மோதியது தங்களுக்கு புது அனுபவம் என்றும் கூறினார் .தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து இந்த என்கவுண்டரை உண்மை என்று நிரூபித்துள்ளது என்றும் கூறினார்

இந்த என்கவுன்ட்டர் சம்பவம் பிளாட் 18 இல் டில்லியில் உள்ள பாட்லா இல்லத்தில். ஜாமியா நகர் என்னும் தெருவில் செப்டம்பர் 19 ,2008 ஆம் ஆண்டு நடை பெற்றது . இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்னால் டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 26 பேர் கொல்லப் பட்டனர் 133 பேர் படுகாயம் அடைந்தனர் .போலீஸ் காரர்களுக்கு தீவிரவாதிகள் பாட்லா இல்லத்தில் இருபதாக தகவல் வந்தது .துப்பாக்கி சண்டை நடந்தது .அபிட் அமீன் ,முஹம்மது சஜித் என்ற இரு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலயே சுட்டு கொல்லப் பட்டனர்.டில்லி மாநகரமே மதித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஷர்மா வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்

பாட்லா என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியன் முஜாகிதின் இயக்கத்த்தை சேர்ந்த அஜாம்காரின் கூட்டாளிகள் .இவர்கள் இதற்கு முன்னால் லக்னவ் , பைசாபாத் , வாரனாசி ,ஜெய்பூர், பெங்களூரு , அஹமேடாபத் மற்றும் டில்லியில் 2007-2008 ஆம் ஆண்டில் பல குண்டு வெடிப்புக்களை நடத்தியவர்கள் திக் விஜய் சிங்க்

இந்த நீதிமன்ற தீர்ப்பு நிச்சியம் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி அரசியல் வாதிகளுக்கு தங்களின் போலி மதசார்பின்மையை காட்டும் முயற்சியில் விழுந்த அடி என்றே சொல்லலாம் .இதில் திக் விஜய் சிங்க் தான் இந்த என்கவுன்ட்டர் போலியானது என்றும் தன் கருத்தை திரும்ப பெற முடியாது என்றும் கூறினார் .சிறுபான்மையின மக்களை திருப்தி படுத்த ஒரு படி மேல போய் காங்கிரஸ் கட்சியின் சல்மான் குர்ஷித் சண்டை நடந்த புகை படங்களை பார்த்து சோனியா காந்தி கண்ணீர்  விட்டார் என்று கூறினார் .நான் புகை படங்களை அவரிடம் காட்டிய போது ,இதற்க்கு மேல் தன்னிடம் படங்களை காட்ட வேண்டாம் என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார் சோனியா என்று கூறினார் .பிரதமரிடம் பொய் இது சம்பந்தமாக பேசும் படி சோனியா தன்னிடம் கூறியதாக அசாம்கார் தேர்தல் கூட்டத்தில் சல்மான் குர்ஷித் கூறினார்

விஷ்வ இந்து பரிஷத் இந்த தீர்ப்பை வரவேற்றது மட்டும் இல்லாமல் இது "போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த அடி என்றும் கூறி உள்ளது" .குறிப்பாக திக் விஜய் சிங் சல்மான் குர்ஷித் போன்று மதசார்பின்மை வேஷம் போடும் போலிகளுக்கு விழுந்த அடி என்றும் கூறியுள்ளது .விஷ்வ இந்து பரிஷத்தின் வினோத் பன்சல் போலீஸ் காரர்களின் பெருமை காப்பாற்ற பாட்டத்தோடு ,ஓட்டூ வங்கி அரசியல் செய்பவர்கள் அசிங்கப் படும் நிலை வந்துள்ளதையும் சுட்டி காட்டினார் .போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஷர்மாவை அவமதித்தவர்கள் மீது ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்

இதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு 65 எம்.பிக்கள் கை எழுத்து போட்டு நரேந்திர மோடிக்கு வீசா தர கூடாது என்று அனுப்பியதில் பலரின் கை எழுத்துக்கள் போலி என்றும் தெரிய வந்துள்ளது .சீத்தாராம் எச்சூரி போன்றவர்கள் தாங்கள் கையோப்பம் இட வில்லை என்று கூறி உள்ளனர் .இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியை கேலிக்கு உள்ளாகி உள்ளது .நரேந்திர மோடியால் காங்கிரஸ் கட்சி ஓரம் கட்ட படும் என்பதை காங்கிரஸ் கார்கள் புரிந்து உள்ளனர்

நன்றி; தமிழில்- பால முருகன்

Leave a Reply