காரைக்கால் பயங்கரவாதிகளின் மையமாக உள்ளது  பயங்கரவாதிகளின் மையமாக காரைக்கால் உள்ளது , இதில் மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

சென்ற மாதம் 22-ம் தேதி காரைக்காலில் நடத்தப்பட்ட பந்த்போராட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்னையில் புதுவைமாநில பா.ஜ.க செயலர் எம்.அருள் முருகன் தாக்கப்பட்டார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சிலர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை நேரில்சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காரைக்கால்வந்தார். அருள் முருகனை சந்தித்து அவர் பேசினார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

புதுவை மாநில பா.ஜ.க செயலர் எம்.அருள் முருகன் பயங்கரவாதிகளால் கடந்தமாதம் தாக்கப்பட்டார். இவருக்கு புதுச்சேரி அரசு உரியபாதுகாப்பை தரவேண்டும். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் அல்உம்மா இயக்கத்தை தடை செய்ய வேண்டும். ரங்கசாமி அரசு தடைசெய்யாமல் இருப்பதை பார்க்கும் போது, அந்த இயக்கத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் வரும்தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதோடு, ரங்கசாமி ஏதாவது ஆதாயத்தை அந்த இயக்கத்திடம் இருந்து பெறுகிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

காரைக்கால் பயங்கர வாதிகளின் மையமாக செயல்படுகிறது. காரைக்கால் துறை முகம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மத்தியஅரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்றார்.

Leave a Reply