தமிழ்நாட்டில் பா.ஜ.க.,வுடனான கூட்டணி தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.,வுடனான கூட்டணி தொடரும் என இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே) நிறுவனர் டிஆர். பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியதலைவர் ராஜ் நாத் சிங்கை வியாழக் கிழமை சந்தித்துப்பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் பச்சமுத்து கூறியதாவது.

இந்திய ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.,வும் மூன்று வருடங்களாக தோழமையோடு இருந்துவருகின்றன. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு பா.ஜ.க ஆதரவு அளித்தது. இவ்விரண்டு கட்சிகளின்கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.

அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள்கட்சியின் 4வது ஆண்டு தொடக்கவிழாவுக்கு பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை அழைப்பதற்காக தில்லிவந்தேன் என்று பச்சமுத்து கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியச்செயலாளர் தமிழிசை செüந்தர்ராஜன், “தமிழ்நாட்டில் கூட்டணியை பலப் படுத்துவதற்காக பா.ஜ.க தேசியதலைவர், பொதுச்செயலாளர்களை சந்தித்து பச்சமுத்துபேசியுள்ளார்,’ என்றார்.

Leave a Reply