பீகாரின், டாமராகாத் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற சிவபக்தர்கள் மீது அதிவேகரெயில் மோதியது. இதில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில்டிரைவரை அடித்து உதைத்ததுடன், ரெயிலுக்கும் தீவைத்தனர்.

மாநிலத்தையே உலுக்கிய இந்தவிபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேல் சபை பா.ஜ.க துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், “25 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 37பேரை பலிவாங்கிய இந்தசம்பவத்திற்கு பா.ஜ.க தனது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. ஆனால், இந்தவிபத்து தொடர்பாக சிலகேள்விகளும் கேட்க வேண்டியுள்ளது.

இந்தமாதத்தில் ஏராளமான மக்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடந்துசெல்வார்கள் என்ற உண்மையை உள்ளூர்நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று ரெயில்வேயின் வாதத்தை ஏற்கமுடியாது. உள்ளூர் நிர்வாகத்தின் மீது அனைத்து குற்றச் சாட்டையும் திணிக்க ரெயில்வேநிர்வாகம் முயற்சிக்கிறது. இது போன்ற தகவல்களை ரெயில்வே தெரிந்திருக்கவேண்டும்.

நடந்த சம்பவம் தொடர்பாக தீவிரவிசாரணை நடத்துவதுடன், பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை தண்டிக்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Leave a Reply