இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின்பட்கல் கைது நடவடிக்கைதொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த கமால் ஃபரூக்கை செயலர்பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது.

இந்திய- நேபாள எல்லையில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின்பட்கல், கூட்டாளியுடன் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்துதெரிவித்திருந்த கமால் ஃபரூக், பட்கலை கைதுசெய்தது அவர் செய்தகுற்றத்தின் அடிப்படையிலா? அவர் இஸ்லாமியர் என்பதற்காக என கேள்வி எழுப்பியிருந்தார்.

யாசின்பட்கலுக்கு ஆதரவாக கமால் ஃபரூக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று கட்சியின் செயலர்பொறுப்பில் இருந்து கமால் ஃபரூக் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply