காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசு, அகரவரிசைப்படி, ஊழல்செய்து வருகிறது. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் , முதலில், காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும்,” என்று பாஜக , பிரசாரகுழு தலைவர், நரேந்திரமோடி, ஆவேசமாக பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், நடந்த பிரசாரகூட்டத்தில், நரேந்திரமோடி பேசியதாவது:காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, அகரவரிசைப்படி, அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துவருகிறது. ஏ – ஆதார்ஷ், பி – போபர்ஸ், சி – கோல் (நிலக்கரி) என, ஒவ்வொரு எழுத்துக்கும், ஒருஊழலை செய்துவருகிறது. குழந்தைகளுக்கு, அகரவரிசையை கற்றுத்தருவதற்கு, காங்கிரஸ் கட்சி, புதியபுத்தகமே வெளியிடலாம்.

ஊழல், காங்கிரஸ்கட்சியின் அணிகலனாக உள்ளது. அந்தகட்சியில் ஊழல் செய்பவர்களுக்குதான், பதவி உயர்வும், பரிசும் வழங்கப்படுகிறது. ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவேண்டுமானால், முதலில், காங்கிரஸ்கட்சியை, ஆட்சி கட்டிலிலிருந்து அகற்றவேண்டும். நாடு, சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த காங்கிரஸ் வேறு; தற்போதுள்ள காங்கிரஸ்வேறு.தற்போதைய காங்கிரஸ், ஒருகுடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது.

சமீபத்தில், “ஜி-20′ மாநாட்டில் பங்கேற்க சென்ற, பிரதமர் மன்மோகன்சிங், அங்கு, என்ன பேசினார் என்பது, யாருக்கும்தெரியாது. ஆனால், மாநாட்டை முடித்துவிட்டு, திரும்பும் போது, தன்னுடைய, புதிய முதலாளியின் (ராகுல்) தலைமையின்கீழ், பணியாற்ற தயாராக இருப்பதாக கூறுகிறார். எந்த பொறுப் புணர்வும் இல்லாதவர்கள்தான், இப்போதைய அரசை நிர்வகிக்கின்றனர்.என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply