பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க ஆர்எஸ்எஸ். இயக்கம்விரும்புகிறது. நாடு பெரும்மாற்றத்தை விரும்புகிறது. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம் என ராம்மாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது மோடிக்குத்தான் மக்களின் ஆதரவும் மதிப்பும் உள்ளது . மக்கள் பெரும்மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் மோடியை எப்போது பிரதமர்வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து பாஜக.,தான் முடிவுசெய்ய வேண்டும் என்று மாதவ் தெரிவித்தார் . நாடுமுழுவதும் நடந்த ஆர்எஸ்எஸ். இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்கத்தினர் மக்கள் பெரும்மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று அறிந்துள்ளனர். நாடு பெரும்மாற்றத்தை விரும்புகிறது. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம் என்றும் மாதவ் நேற்று புது டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

Leave a Reply