அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

மக்களவை தேர்தலில் 272 இடங்களுக்குமேல் கைப்பற்றுவோம் என நம்புகிறோம். ஆட்சியில் அமர்ந்தவுடன் நலிவுற்ற நிலையிலிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு, உலக அளவில் இந்தியா இழந்தபெருமையை மீண்டும் நிலைநாட்டுவோம்.

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிவென்று ஆட்சியமைக்கும் போது கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில்பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.

மேலும் ம.பி.,யின் போபாலில் வரும் 25ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது . இதில் கட்சியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அந்தக்கூட்டத்தில் அத்வானி, மோடி ஆகிய இருவரையும் ஒரே மேடையில் பார்க்கலாம் என்றார்.

Leave a Reply