குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

வரும் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர்வேட்பாளாராக மோடி முன்னிருத்தப் பட்டுள்ளதை வரவேற்ற அவர், மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நரேந்திரமோடி, தேசத்தின்பால் கொண்டுள்ள அக்கûறை, அவருடைய அணுகு முறை போன்ற குண நலன்கள் அவருக்கு இந்தவாயப்பை பெற்று தந்துள்ளது என்றார்.

என்னை பொருத்தவரை, இந்தியாவுக்கு அணுமின்திட்டங்கள் தேவையில்லை. “அணுசக்தி வேண்டாம், சூரிய சக்தியே வேண்டும் என்பது எனதுகொள்கை. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் அந்நாட்டிலுள்ள அணு உலைகளை மூடும் அளவுக்கு சென்றதை குறிப்பிடலாம்.

என்னைப்போன்று நரேந்திர மோடியும் சூரிய சக்திக்கு ஆதரவானவர். இந்தியாவில் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத அளவில் சூரிய சக்தி திட்டங்களை செயல்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கிக்காட்டியவர்.

அதேபோன்று மகாத்மாகாந்தியின் மது அருந்தாமை கொள்கையை கடைப்பிடிக்கும் ஒரேமாநிலம் மோடி ஆளும் குஜராத்மட்டுமே. தவிர, லஞ்ச லாவண்ய மற்ற மாநிலமாக மாற்றும் முயற்சியிலும் மோடி இறங்கியுள்ளதாக கிருஷ்ணய்யர் பாராட்டினார்.

நரேந்திரமோடியின் செயல்பாடுகள், அவரது நிர்வாகத்திறமையை தேசிய அளவில் பயன்படுத்தி கொள்ள அவரை நாம் ஆதரிக்கவேண்டும்.

பிரதமராவதற்கு மோடிக்கு இது போன்றதொரு அரியவாய்ப்பு கிட்டியுள்ள நிலையில், நாட்டில் சுயராஜ்ஜியத்தை நிலை நாட்டவும்,வறுமையை அறவே ஒழித்திடவும் அவர் பாடுபடவேண்டும் எனவும் கிருஷ்ணய்யர் கேட்டுக்கொண்டார்.

நான் அடிப்படையில் பொதுநலவாதி. எனவே மோடியை ஆதரிக்கிறேன். மோடியும் ஒரு பொது நலவாதிதான். இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சமூக, பொருளாதாரத்தை பேணுவதில் காந்தீய சிந்தனையையும் அவர் பின்பற்றுகிறார் என்று கிருஷ்ணய்யர் மேலும் கூறினார்.

Leave a Reply