உபி.,யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் உபி.,யில் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக இன்று பாஜ., தேசியதலைவர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், உபி.,யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உ.பி.,யின் முசாபர்நகர் மாவட்டத்தில், சமீபத்தில், இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், 50பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் , கலவரம் காரணமாக, முகாம்களில் தஞ்சம்புகுந்துள்ளனர். மேலும் உபி.,யில் முசாபர்நகர் கலவரத்தினை தூண்டியதாக பொய் குற்றச்சாட்டினை கூறி பாஜக.,வை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கலவரத்தை கண்டித்தும், எம்எல்‌ஏ.,க்கள் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், மேற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக , பந்த்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. பின்னர் தேசியதலைவர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரி்க்கை மனுகொடுத்தார். அவருடன் வருண், உமா பாரதி உள்ளி்ட்ட உ.பி., மாநில பா.ஜ.க,வினர் கலந்துகொண்டனர். அந்த கோரிக்கையி்ல் கலவரத்தினை தடுக்கதவறிய அகிலேஷ்யாதவ் அரசை கலைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply