திருச்சியில் வரும் 26ம் தேதி நடைபெற இருக்கும் பா.ஜ.க மாநில மாநாட்டில் குஜராத்முதல்வர் மோடி கலந்துகொள்ள இருப்பதால், அம்மாநிலத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்புபடை திருச்சிக்கு வர உள்ளது. திருச்சி பொன்மலை ஜிகார்னரில் பாஜக இளந் தாமரை மாநாடு வரும் 26ம் தேதி மாலை

நடைபெறுகிறது. இதில் குஜராத்முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, அகில இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதற்காக டெல்லி செங்கோட்டைவடிவில் பிரமாண்டமேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் மோடியின் பாதுகாப்புக்காக குஜராத் மாநிலத்தில் இருந்து ஐஜி தலைமையில் சிறப்பு பாதுகாப்புபடையினர் திருச்சி வருகின்றனர். இந்த குழு திருச்சியில் முகாமிட்டு விழாமேடை, மைதானம், அதனை சுற்றி உள்ள பகுதிகள், விமான நிலையத்தில் இருந்து மைதானத்திற்கு வரும் வழி ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர்.

Leave a Reply