தேநீர்விற்ற நான் பாஜகவின் பிரதமர் வேட்பாளரானேன்” என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பெருமிதப்பட்டார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது;

“ஒருகாலத்தில் குஜராத் மாநில ரயில்நிலையங்களில் தேநீர் விற்றுவந்தேன். பிறகு கட்சியில் உழைத்த என்னை நாட்டின் பிரதமர்வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு தாராளக் கொள்கைகள் கொண்டது பாஜக. அதன் மதிப்பையும், கலாசாரத்தையும் மக்கள் உணரவேண்டும். நான் ஆட்சியாளன் அல்ல; அக் கனவைக்கண்டதும் கிடையாது. எப்போதுமே உங்கள் சேவகன். அதுபோலவே எப்போதும் இருப்பேன். அரசில் “தேசியமும், இந்தியாவும் தான் முதலானது’ என்ற மதம் மட்டுமே உள்ளது. அதன் புனிதநூல் அரசியலமைப்பாகும். அடல்பிஹாரி வாஜ்பாய், அத்வானி, குஷபாவ்தாக்ரே கற்றுத்தந்த இப்பாடத்தின்படி உங்கள் முன் நிற்கிறோம்’ என்றார் நரேந்திரமோடி.
.

Leave a Reply