வலிமையானபாரதம் உருவாக, வலிமையான தலைமை அமைய சபதமேற்போம் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகைகளை முன்னிட்டு, பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பாரதமக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் வெற்றித்திருநாள் விஜயதசமி. கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றைவேண்டி சரஸ்வதி, லட்சுமி, பராசக்தி ஆகிய கடவுள்களை வணங்கும்நாள் இது.

செய்யும்தொழிலை தெய்வமாக போற்றும் நமது மரபைப்பின்பற்றி ஆயுதபூஜை கொண்டாடும் அனைவருக்கும் பா.ஜ.க சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டில் வறுமை ஒழியவும், வளம்பெருகவும், லஞ்ச லாவண்யங்கள் அகலவும், சத்தியம், தர்மம்நிலைக்கவும் இந்நாளில் உறுதியேற்போம். வலிமையானபாரதம் உருவாக, வலிமையான தலைமை அமைய, தேசியமும் தெய்வீகமும் இணைந்த நல்லாட்சி மலர்ந்திட வெற்றித்திருநாளில் சபதமேற்போம் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply