திருதராஷ்டினனும் பாண்டுவும், சகோதரர்கள். மூத்தவன் திருதராஷ்டினனுக்கு கண் தெரியாததால்,இளையவன் பாண்டுவை அரசராக்குகிறார்கள் பாண்டுவுக்கு 6 குழந்தைகள்(கர்ணன் உட்பட)

தன்னால் அரசராக முடியவில்லையே .நமக்கு பிறகு வரும் சந்ததிக்கு அரசனாக வரும் வாய்ப்பு இல்லையே என்ற வருத்தம் திருதராஷ்டினனை அவ்வப்போது வாட்டுவதுண்டு

திருதராண்டினனுக்கு 101 குழந்தைகள்.துரியோதனன் மூத்தவன்.

திடீரென பாண்டு இறந்துவிடுகிறார். திருதராஷ்டினன் அரசராகிறான்.

அவர்களது குழந்தைகள் வளர்கிறார்கள்.

சட்டப்படி பாண்டுவின் மூத்தமகன் அரசனாக வேண்டிய காலம் வந்தது.திருதராஷ்டினனுக்கு தனது மகன் துரியோதனனை அரசனாக்க வேண்டும் என்று விருப்பம்.

கடைசியில் பெரியோர்கள் நாட்டை இரண்டாக பிரித்து.ஒரு பகுதிக்கு துரியோதனனை அரசனாகவும் .இன்னொரு பகுதியில் தர்மருரை (யுதிஷ்டிரர்)அரசராகவும் நியமித்தார்கள்.

பஞ்சபாண்டவர்களின் கடின உழைப்பின் காரணமாக அவர்கள் நாடு வேகமாக முன்னேறியது.இதை கண்டு துரியோதனன் பொறாமைப்பட்டான்.அவர்களது நாட்டை கைப்பற்ற முயற்சி செய்தான்.அதற்காக வஞ்சக செயல்களில் ஈடுபட்டான்.

துரியோதனனின் வஞ்சகத்தில் வீழ்ந்த பாண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி காட்டிற்கு சென்றார்கள்.13 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டை திருப்பி தருவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

13 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நாட்டை திருப்பிதர துரியோதனன் மறுத்துவிட்டான்.போர்புரிந்து எங்களை ஜெயித்து பிறகு நாட்டை திரும்ப பெறுமாறு கூறினார்கள்.

வேறுவழியில்லாததால் போர் ஏற்பட்டது.

Leave a Reply