நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று மத்திய உளவுத் துறையான ஐபி விடுத்த எச்சரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வேண்டும் என்றே அலட்சியப் படுத்தியுள்ளார் என பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க தலைவர் அருண்ஜேட்லி கூறுகையில், நரேந்திரமோடி தாக்கப்படலாம் என்று தங்களுக்கு உளவுத் துறையிடமிருந்து தகவல்வரவில்லை என்று நிதீஷ்குமார் கூறுகிறார். ஆனால் நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு சிலநாட்களுக்கு முன்பே இதுதொடர்பாக ஐ.பி எச்சரிக்கைவிடுத்து கடிதமும் அனுப்பியுள்ளது.

அந்த எச்சரிக்கையை, தீவிரவாதத்தாக்குதல் நடக்கலாம் என்ற எச்சரிக்கையை நிதீஷ்குமார் அரசு வேண்டும் என்றே அலட்சியப்படுத்தியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி பொதுவான எச்சரிக்கையையும், அக்டோபர் 23ம்தேதி இந்தியன் முஜாஹிதீன் குழுவினர் மோடியின் கூட்டத்தை சீர்குலைக்கலாம் என்று குறிப்பிட்டும் ஐபி எச்சரித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க பீகார் அரசும், காவல் துறையும் தவறியுள்ளன. வேண்டும் என்றே அவர்கள் அலட்சியம்காட்டியுள்ளனர். மிகவும் மெத்தனமாக நடந்துள்ளனர் என்றார் ஜேட்லி.

Leave a Reply