ராகுல்காந்தியை குஜராத் முதல்வர் மோடி இளவரசர் என அழைப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்புதெரிவித்துள்ளதே, அப்படி என்றால் அவரை மன்னர் என அழைக்கலாமா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத் முதல்வரும், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி மேடைகளில் பேசுகையில் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தியை இளவரசர் என்று அழைத்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பரம்பரை அரசியலை காங்கிரஸ் நிறுத்தினால்தான் ராகுலை இளவரசர் என்று அழைப்பதை தான் நிறுத்தப்போவதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறுகையில், ராகுலை இளவரசர் என்று அழைக்கக்கூடாது என்றால் மன்னர் என்று அழைக்கலாமா?. பாட்னாவில் மோடியின்பேரணி நடந்த இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி அரசு தரப்பும், காங்கிரஸ் தலைவர்களும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். நம்நாட்டில் இந்தியன் முஜாஹிதீன் வளர மத்திய அரசின் மெத்தனமேகாரணம். இந்தியன் முஜாஹிதீன் எந்த குறிப்பிட்ட மதத்திற்காகவும் வேலைசெய்யவில்லை. மாறாக நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தும் மோடிபேரணிக்கு சென்றார். இல்லை என்றால் அது தவறான தகவல் பரவ காரணமாகிவிடும். மோடிக்கு நாங்கள் சிறப்புபாதுகாப்பு கேட்டிருந்தோம். அது ஏன் சிறப்புபாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் அளிக்கப்படுகிறது? என்றார்.

Leave a Reply