சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் இல்லை. அன்று கட்டிய வேஷத்தை இன்று வரை அழிக்காமலேயே வைத்திருக்கிறது இந்த கூட்டம். ஹிந்தி எதிர்ப்பில், கடவுள் மறுப்பில்

இவர்கள் கிழித்த பகுத்தறிவுக் கோடுகளை அவர்களாகவே தாண்டி விட்டார்கள்.

அரக்கர்கள் தமிழர்கள் அதனால் இது தமிழ்ப் பண்டிகை கிடையாது என்று சொல்லும் இந்த மூடர்களிடம் கேளுங்கள் .. அப்படியானால் உன் பாட்டனும், என் பாட்டனும் அயோக்கியர்களா என்று. அரக்கர்களை பெரும்பாலும் வில்லன்களாகவே சித்தரித்திருக்கும் நம் புராணங்கள். அதே அரக்கர்களை தவ சீலர்களாகவும், பக்திமான்களாகவும் காட்டியிருக்கிறது.

ஹிந்து தர்மத்தை மறைந்திருந்து நேசிக்கும் இவர்களுக்கு ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஹிந்துக்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த இனிய நாளில் இதுபோன்ற அசுர குணங்களை அழித்து தேவ குணங்களோடு வளமுடன் வாழ்வோம். சகோதர , சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply