குஜராத் கலவரத்துக்கு, முதல்வர் நரேந்திரமோடி மீது பழி சுமத்துவது தவறு என்று பஞ்சாப்மாநில முன்னாள் போலீஸ், டி.ஜி.பி., – கேபிஎஸ்.கில் கூறியுள்ளார்.

பஞ்சாப்மாநில, முன்னாள் போலீஸ் டிஜிபி.,யும், 2002ல், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தவருமான, கேபிஎஸ். கில் கூறியுள்ளதாவது: குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில்எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும்கலவரம் ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் இறந்தனர்.

இந்த கலவரத்துக்குபின், முதல்வர் நரேந்திரமோடியின், பாதுகாப்பு ஆலோசகராக, நான் நியமிக்கப்பட்டேன். கலவரம் நடந்த அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வுநடத்தினேன். இந்த கலவரத்துக்கு, முதல்வர் நரேந்திரமோடி மீது பழி சுமத்தப்படுகிறது. ‘கலவரத்துக்கு, அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என, பலரும், விமர்சிக்கின்றனர். இதன்மூலம், அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற கலவரங்களை கட்டுப்படுத்தவேண்டியது, சட்டம் – ஒழுங்கை கையில்வைத்திருக்கும், உயர்போலீஸ் அதிகாரிகள்தான். ஆட்சியாளர்கள் மீது, பழிபோட முடியாது. என்று , கில் கூறியுள்ளார்

Leave a Reply