இந்தியாவில் பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் அவருடன் இணைந்துசெயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக ஒபாமாவின் அலுவலகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மோடியின் விசாவிவகாரம் குறித்து மோடியுடன் பேச தயாராக இருப்பதாக அந்நாட்டு உயர்அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் இந்திய நாடாளுமன்ற தேர்தல்முடிவு எதுவாக இருந்தாலும் இந்ந்தியாவுடன் நல்லுறவை தொடர்வதேகுறிக்கோள்

ஏற்கெனவே, பாஜக. ஆட்சியில் இருந்தபோதும் அமெரிக்கா இந்தியாவுடன் நல்ல உறவில் இருந்தது. எனவே மோடி ஆட்சிக்குவந்தாலும் அவருடன் இணைந்துசெயல்பட தயாராக இருக்கிறோம்.

மோடி, அமெரிக்கா விசாபெற விரும்பினால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். விசாவழங்குவது ஒன்றும் அவ்வளவு பெரியபிரச்சினை இல்லை, இந்திய ஊடகங்கள்தான் அதை மிகைப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply