குஜராத்முதல்வர் நரேந்திரமோடி செயல்படுத்தி வரும் சூரிய மின்சக்தி திட்டம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15ம் தேதி முதல் 99வயதை எட்டும் கிருஷ்ணய்யர், கொச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை வெள்ளிக் கிழமை சந்தித்தார். அப்போது, “யார் சிறந்தபணிகள் செய்தாலும் அவர்களைப் பாராட்டுவேன். அது நேருவாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும்சரி. குஜராத் மாநிலத்தில் மோடி செயல்படுத்திவரும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட திட்டங்கள் என்னை கவர்ந்தன.

அதனால்தான் மோடியை புகழ்தேன். அதற்கு என்னை மோடியின் ஆதரவாளர் என சிலர் கூறிவருகிறார்கள். மோடி தவறுசெய்தால் அதையும் சுட்டிக்காட்டுவேன். ஏழைகளுக்கு இலவச சட்டஉதவி மையம் அமைக்க வேண்டியதே எனது வாழ்நாள் லட்சியம்’ என கிருஷ்ணய்யர் தெரிவித்தார்.

கேரளத்தில் முதல் முறையாக இடதுசாரிகள் ஆட்சிபொறுப்புக்கு வந்தபோது, இஎம்எஸ். நம்பூதிரிபாட் அரசில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply