காங்கிரஸ் கட்ச்சியை சேர்ந்த ஒரு மந்திரி மோடி காங்கிரசுக்கு மிகப்பெரிய சவால் என்கிறார் , மற்றொரு மந்திரி மோடி ஒரு சவால் அல்ல என்கிறார். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவது அவர்களது திறமையின்மையும், ஊழலும்தான் என்று பா.ஜ.க துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்:-

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியின் ஒருமந்திரியான ப.சிதம்பரம், மோடி காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குவார் என்று கூறுகிறார். அதேநேரத்தில், மற்றொரு மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, மோடி ஒருசவால் அல்ல என்கிறார். வரும் சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவோம் என்கிறபயத்தால் காங்கிரஸ் தலைவர்கள் மன அழுத்தத்தில் உளறிவருகின்றனர்.

அவர்களுக்கு சிலநல்ல மருத்துவனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். உண்மையில் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குவது அவர்களது திறமையில்லாத ஆட்சியும், ஊழலும்தான். இந்நிலையில் மோடி, ஒருவலிமையான தலைமையாகவும், சாத்தியமான ஒருமாற்றாகவும் விளங்குவதால், பாஜக நிச்சயம் காங்கிரசின் தவறான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இதன்காரணமாக, காங்கிரஸ் ஒரு எதிர் மறையான அரசியலில் ஈடுபட்டுவருகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடித்தல், திறமையில்லா நிர்வாகம், தீவிரவாதம், வேலையின்மை, பண வீக்கம் போன்ற காரணங்களால் கோபமடைந்துள்ள மக்களை சமாதானப்படுத்த அர்த்தமற்ற, ஒவ்வாத அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டுவருகின்றனர் என்று அவர் கூறினார்.

Leave a Reply