ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டினில் மற்றொரு ஊழலுக்கும் வாய்ப்பிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் பா.ஜ.க., மூத்த தலைவர் யஷ்வந்த்சின்ஹா எச்சரித்துள்ளார்.

இது குறித்து யஷ்வந்த் சின்ஹா அனுப்பியுள்ள கடிதத்தில், அண்மையில் டிராய்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான அடிப்படை விலையை பலமடங்கு குறைத்து அறிவித்தது. டிராய் பரிந்துரைகளின்படி 1800mhz பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. இது 37 சதவீத விலை குறைப்பாகும்.

மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் 50சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அதிரடியாக குறைத்திருப்பதன் மூலம் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைய வழிவகுக்கும். இந்த விலைக் குறைப்பால் ரூ.27,000 கோடி வரைக்கும் அரசுகு இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply