பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக.,வுக்கு மக்களின் ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில் பிரதமர் வேட்பாளரான அவர் உத்திர பிரதேசத்தில் போட்டியிடலாம் என்று முன்பு தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் அந்தமாநிலத்தில் உள்ள கான்பூர், லக்னோ, வாரனாசி உள்ளிட்ட பாராளுமன்றதொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

இப்போது அந்தமுடிவு மாற்றம் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர்வேட்பாளரான அவர், பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தீவிரபிரசாரம் செய்ய வேண்டி இருக்கும்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் போட்டியிட்டால், அதற்கு தனிகவனம் செலுத்தவேண்டியது வரும். எனவே, பாராளுமன்ற தேர்தலில் மோடி குஜராத்தில் போட்டியிடவேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply