பாட்னா குண்டு வெடிப்பில் பீகார்மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி .,ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் அவரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பீகார்மாநிலம் பாட்னாவில் கடந்தமாதம் 27ம் தேதி பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற கூட்டத்தில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட தீவிரவாதி அன்சாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஞ்சியில் உள்ள ஓய்வுபெற்ற டி.எஸ்.பி ஒருவர்வீட்டில் அக்தரையும், அலியையும் சந்தித்ததாக அன்சாரி ஒப்புதல்வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் பீகார்மாநிலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்த தகவலை ராஞ்சியைசேர்ந்த உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply