பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ள பாஜக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்கு தகுந்தவிளக்கம் அளிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த 7ந்தேதி சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியின் கைசின்னத்தை விமர்சித்ததாக புகார் எழுந்தது.

மோடியின் இந்தபேச்சு தேர்தல் விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ்கட்சி புகார்செய்தது. அதன் பேரில் வரும் 16ந் தேதிக்குள் விளக்கம் தருமாறு மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மோடிபேசியதில் தவறு ஏதும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

அவருக்கு அனுப்பட்ட நோட்டீஸிற்கு தகுந்தபதில் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply