குஜராத் முதல்வர், நரேந்திரமோடியை சந்திக்க தயாராக இருக்கிறேன்,” எங்கள் மந்திரிகளும் மற்றவர்களும் ஏற்கனவே மோடியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; நரேந்திர மோடியை சந்திப்பதற்கு தயாராக உள்ளேன் . எங்கள் வெளியுறவு அமைச்சர், அவரை ஏற்கனவேசந்தித்து பேசியுள்ளார்; அது, குஜராத்வளர்ச்சி திட்டங்கள் குறித்த சந்திப்பாக அமைந்திருந்தது. மோடியுடன் நாங்கள் தொடர்பிலிருக்கிறோம்.

இதற்கான நேரம்வந்து, அவரை இந்தியமக்கள் பிரதமராக தேர்வுசெய்து, அவர் தலைமையிலான ஆட்சி அமைந்தால், அவருடன் நாங்கள் பேசுவோம். நானும் சந்தித்து பேசதயார். இதில், எந்த பிரச்னையும் இல்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட, எல்லா கட்சித் தலைவர்களையும் நாங்கள் சந்திப்பதால் இதை பிரச்னையாக கருதவேண்டியதில்லை. என்று கேமரூன் கூறினார்.

Leave a Reply