பாட்னா காந்திமைதானத்தில் நடந்த நரேந்திரமோடி கூட்டத்தின் போது அவரைக்கொல்லும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தோம். மேலும் நானும் இன்னொருவரும் மனித வெடிகுண்டுகளாகவும் வந்திருந்தோ்ம். ஆனால் கடைசிநேரத்தில் குண்டு வெடிக்காமல் போனதால் எங்களது நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது என காவல் துறையினரிடம் சிக்கியுள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி இம்தியாஸ் தெரிவித்துள்ளான்.

பாட்னா குண்டு வெடிப்பு மோடியை குறிவைத்தே நடந்தது என்றும், மோடியைக்கொல்லவே அன்று தொடர்குண்டு வெடிப்பை நிகழத்தியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளான். இந்த சதித்திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வைத்துத் தீட்டியதாகவும், மனித வெடி குண்டுகளாக தானும் இன்னொரு தீவிரவாதியும் வந்ததாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளான்.

பாட்னாவில் நடந்த கூட்டத்தின் போது மோடிவருவதற்கு சிலநிமிடங்களுக்கு முன்பு 7 குண்டுகள்வெடித்தன. இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 80 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு பிறகும் பாஜக பொதுக்கூட்டம் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடந்தது. மோடியும் பேசிச்சென்றார்.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக குண்டு வெடிப்பு நடந்த இடத்தில்வைத்து இம்தியாஸ் என்பவனை போலீஸார் கைதுசெய்தனர். இவனிடம் நடத்திய விசாரணையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச்சேர்ந்தவன் என்று தெரியவந்தது.

இம்தியாஸ் தந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாவது.. மோடியைக் குறிவைத்தே அன்று குண்டு வெடிப்பை நிகழ்த்தினோம். ராஞ்சியில்வைத்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரான நாங்கள் இதைதீட்டினோம்.

இரண்டுபேர் சேர்ந்து இந்த திட்டத்தைத் தீட்டினோம். அனைத்து குண்டுகளையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் வைத்தோம். கூட்டம்தொடங்குவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்புதான் வைத்தோம்.

நானும் என்னுடன்வந்த நபரும் மனித வெடி குண்டுகளாக வந்திருந்தோம். கூட்டத்துக்குள்புகுந்து குண்டுகளாக மாறி வெடித்துச்சிதறி சேதத்தை ஏற்படுத்துவதே எங்களதுநோக்கம். இதற்காக பொதுக்கழிப்பறை ஒன்றில் புகுந்து எங்களது உடலில் குண்டுகளைகட்டினோம்.

ஆனால் எதிர்பாராமல் ஒருகுண்டு வெடித்து விட்டது. இதில் எனது கூட்டாளி படு காயமடைந்து விட்டான். இதுதான் பாட்னா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு (இந்த நபர் தற்போது இறந்து விட்டார்.). எனது குண்டும் செயல்படாமல் போய்விட்டது.

நாங்கள் பஸ்மூலம் பாட்னாவுக்கு வந்துசேர்ந்தோம். வந்த வேகத்தில் வேலையில் இறங்கிவிட்டோம். எனது கூட்டாளியின் உடலில் வெடித்தகுண்டை, கூட்ட மைதானத்தில் வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் தவறான இணைப்பால் அந்தக்குண்டு எதிர்பாராமல் வெடித்துவிட்டது.

அத்தனை குண்டுகளையும் இணைப்புயில்லாமல் பையில் போட்டுக்கொண்டு வந்தோம். கழிப்பறையில் வைத்துத் தான் இணைப்புகொடுத்தோம். இந்தப்பணியில் எங்களுடன் மொத்தம் 8 பேர் இணைந்து செயல்பட்டனர் என்று கூறியுள்ளான் இம்தியாஸ்.

Leave a Reply