இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும் தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், போருக்குப்பின் நடைபெற்று வரும் தவறுகள் குறித்து, 54 நாடுகள் கலந்து கொண்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும். தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவர்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்த பிறகு இந்தியா முழுவதும் குக்கிராமங்களிலும் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம மக்களின் உண்மை நிலையை அறிந்து நரேந்திர மோடியிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளோம்.

தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளிலும் குஜராத்தில் நடைபெற்றுவரும் ஆட்சிகுறித்தும், முந்தைய வாஜ்பாய் அரசின் சாதனைகளையும் கூறி பாதயாத்திரை நடைபெறுகிறது.
வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை எனும் கோஷத்துடன் டிச. 1-ஆம் தேதிதொடங்கும் இந்த யாத்திரை டிச. 20-ம்தேதி முடிவடையும் என்றார்.

Leave a Reply