பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி சிறுவயதில் ரெயில்வே நிலையம் மற்றும் ரெயிலிலும் டீவிற்று இருக்கிறார். இந்நிலையில் ஒரு சமாஜ்வாடி கட்சி தலைவர், ஒரு கான்ஸ்டபிள் எஸ்பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராகமுடியாது என சாடியிருந்தார்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் ராய்கர்-பீமதார பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

டீவிற்றவரை நாட்டின் பிரதமராககொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டைவிற்பதை காட்டிலும் டீவிற்பதே சிறந்தது.

மோடி என்ன பேசுகிறார் என்று பார்க்க ராகுல் டி.வி பெட்டிக்கு முன்பு உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நம்பர் 2 ஆன ராகுல், நாட்டை வழிநடத்திசெல்வது குறித்து கவனம் செலுத்துவதற்கு நேரம் ஒதுக்காமல் என்னைப்பற்றி கவனிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

சோனியா பின் தங்கியவர்களின் மேம்பாட்டிற்கான முறையான கொள்கைகளை பின்பற்ற தவறிவருகிறார். நாட்டின் நலனுக்காக இந்த நடைமுறைகளை யார் கொண்டுவந்தது? உங்களுடைய கணவரா? அல்லது உங்களது மாமியாரா?.

சத்தீஸ்கரில் நாங்கள் மூன்றாம் முறையாக நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என்று அவர் கூறினார்.

Leave a Reply