ஒரு தடவை, இந்த வலைப்பூவின் இறுதியில், ஹைதராபாத் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு ஐ நா பாதுகாப்புக் குழுவுக்கு சபைக்கு எடுத்துப் போக இருந்ததாகவும், ஹைதராபாதுக்கு ராணுவத்தை அனுப்பும் சர்தார் படேலின் முடிவை பலமாக எதிர்த்ததாகவும் ஒரு செய்தி பயனீர் என்னும் பத்திரிக்கையில் நான் படித்திருந்த ஒரு விஷயத்தைப் பற்றி நினைவுகூர்ந்திருந்தேன்.

எம் கே கே நாயர் என்னும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி எழுதியிருந்த ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது அந்தச் செதி. வலைப்பூவில் டாக்டர் முன்ஷியின் கடிதம் பற்றி சொல்லும்போது, பரபரப்பாக இந்தப் புத்தகத்தைத்தேடிக் கொண்டிருக்கிறேன் , எங்குமே கிடைக்கவில்லை; என்னுடைய புத்தகசாலையிலும் இல்லை, எந்த புத்தக வெளியீட்டாளர்களிடமும் கிடைக்கவில்லை. பயனீர் ஆசிரியர் திரு சந்தன் மித்ராவும் உதவ முடியவில்லை. என்னுடைய வலிப்பூவின் மூலம் மிகுந்த நன்றியுடையனாக இருப்பேன் என்று வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். கேரள பா ஜ க மூத்த தலைவர் திரு ஓ ராஜகோபால் அவர்களையும் கேட்டிருந்தேன்.

இம்முயற்சிகள் பலனளித்தன. முக்கியமாக திரு ராஜகோபால் அவர்களின் முயற்சியால் புத்தகத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன. உண்மையில் அப்புத்தகம் மலையாளத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் பயனியரில் அந்த செய்தி வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் அப்புத்தகத்தை திரு கோபகுமார் என்பவர் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறராம். அவரே எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறர். அத்துடன் மொழியாக்கக் கையெழுத்துப் பிரதி ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். விரைவில் எடிட்டிங் செய்யப்பட்டு புத்தகம் ஆங்கிலத்தில் வந்து விடும் என்றும் எழுதியிருக்கிறார்.
அக்கையெழுத்துப் பிரதியில் குறிப்பிட்ட பகுதியைப் படித்தால், ஹைதராபாத் விஷயமாக நேருவுக்கும் படேலுக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் ஏர்பட்ட மந்திரிசபைக் கூட்டம் பற்றிக் குறிப்பிடுகிறது. இவ்விவாதம் , 1948-ல் நடந்ததாகச் சொல்லப்படும் "போலீஸ் நடவடிக்கை" க்கு சற்று முன்னால் நடந்திருக்கிறது. இச்சமயத்தில்தான் மெளண்ட்பேட்டன் பிரபு இங்கிலாந்த் திரும்பியிருந்தார், ராஜாஜி கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றிருந்தார்.

திரு எம் கே கே நாயர் எழுதிய புத்தகம் சில பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளைப் பற்றி மிகவும் கடுமையான தகவல்களைத் தருகிறது. குறிப்பிட்ட பகுதியை சுருக்கிக் கூறாமல் , நாயர் அவர்களே " The Story of an Era Told Without Illwill " enRa thanathu puththagaththil என்ன சொல்கிறார் என்று தருகிறேன் "

நாயர் எழுதுகிறார் :

" ஏப்ரல் 30-ம் தேதி 1948-ம் வருடம் , ஹைதராபாத் நகரத்திலிருந்து இந்திய ராணுவம் nizamkasim-rizviமுற்றிலும் வெளிவந்து விட்டது. அதன் பின்னர், ரிஜ்விக்களும் ரஜாக்கர்களும் மாநிலம் முழுவதும் மிகவும் ஆட்சேபகரமான கீழ்த்தயரமான முறையில் :நடந்துகொள்ள ஆரம்பித்தனர். மெளண்ட்பேட்டன் போய்விட்டார்; ராஜாஜி கவர்னர் ஜெனரலானார். ஹைதராபாதில் நிகழ்ந்து கொண்டிருந்த மிகவும் ஆபத்தான சூழ்நிலைய நேரு, ராஜாஜி மற்றும் படேல் அறிந்திருந்தனர். நிஜாமின் அயோக்கியத்தனத்திற்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை மீண்டும் அனுப்பபட வேண்டும் என்று படேல் நம்பினார். அப்போழுது, நிஜாம் பாகிஸ்தானுக்கு ஒரு தூதுவரை அனுப்பினார்; வெளிநாட்டிலிருக்கும் அரசின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு பெரும் தொகையை பாகிஸ்தானுக்கு மாற்றம் செய்தார். அமைச்சரவையில் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியத்தை படேல் வற்புறுத்தினார். சாதாரணமாக மதிப்பும் மரியாதையும் மெந்மையாகவும் பேசும் நேரு அப்போது தன்னிலை தவறி ர் ," நீர் ஒரு மதவாதி. உம்முடைய பரிந்துரையை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் " என்று வெடித்தார்.

படேல் அமைதியாக தனது குறிப்புகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

ஹைதராபாதில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டு வந்தது. அடிப்படைக் காரணத்திற்கான தீர்வையும் நேரு படேல் இருவருக்குமிடையே சமரசம் உண்டாக்குவதற்கும் ராஜாஜி முயன்றார். வி பி மேனனை அழைத்துப் பேசினார். ராணுவம் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்புக்கான தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். ராஜாஜி ,நேருவையும், படேலையும் மறுநாள் ஜனாதிபதி மாளிகைக்கு ( அப்போது அது கவர்னர் ஜெனரல் மாளிகை ) வரும்படி அழைத்தார். மேனனையும் வரச் சொன்னார். மேனன் அக்கூட்டத்திற்குச் செல்லும்போது, புட்ச் என்ற ஒரு ஐ சி எஸ் அதிகாரி ( இவர் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்; திருவிதாங்கூர் , கொச்சி இந்தியாவுடன் சேருவதற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தியவர் ) அவரை மறித்து, ஒரு கடிதத்தைக் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கன்னியாமடத்தைச் சேர்ந்த எழுபது வயது கன்னியாஸ்த்ர்ர்களை கற்பழித்ததை எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் ஹை கமிஷன் எழுதியிருந்த கடிதம். அதை மேனன் ராஜாஜியிடம் கொடுத்தார்.

நேருவும் படேலும் வந்தபின் கூட்டம் துவங்கியது. ராஜாஜி அவருக்கே உரிய முறையில் நிதானமாக ஹைதராபாத் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தார். நிலைமை கட்டு மீறிப் போகாதிருக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்று வற்புறுத்தினார். உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாவோமோ என்று நேரு தயங்கினார். ராஜாஜி தனது துருப்புச் சீட்டை பயன்படுத்தினார். மேனன் கொடுத்த கடிதத்தை நேருவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்ததும் நேரு அடைந்த கோபத்திற்கு அளவேயில்லை, தனது சிவந்த முகம் மேலும் சிவக்க, நாடி நரம்புகள் புடைத்தெழ, கோபம் தொண்டையடக்க, , தனது இருக்கையிலிருந்து வெடுக்கென எழுந்த நேரு எதிரிலிருந்த மேசையை ஆத்திரம் பொங்கக் குத்தி , ' சற்றும் தாமதிக்க வேண்டா; அவர்க்ளுக்குச் சரியான பாடம் கற்பிக்க உடனே நடவடிக்கை எடுப்போம் ' என்று முழங்கினார்.

ராஜாஜி உடனே மேனனிடம் , " விபி , உடனே திட்டமிட்டபடி நடவடிக்கை எடுக்கு கமாண்டருக்கு ஆணையிடுங்கள் " என்றார்.

வி பி ஜெனரல் புஷருக்கு உத்தரவு கொடுத்தார்.  நேரு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கர்ந்திருந்தார். தேநீர் அருந்தினார். அவரிடம் ராஜாஜி புன்முறுவலுடன் , " புற்று நோய்க் கட்டி என்றால், வலிக்குமே என்றாலும் அறுவை அவசியம் தானே " என்றார்.

வி பி மேனன் தனது அலுவலகத்துக்குத் திரும்பி ஆக வேண்டிய காரியங்களுக்கான் திட்டங்களை முடிவு செய்தார். பாகிஸ்தான் கமாண்டர் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவருக்கு இந்தியத் தலைவர்களைப் பிடிக்காது. ஜெனரல் லாக்ஹார்ட்டுக்குப் பின் ஜெனெரல் புஷர் பதியேற்றபோது, கடவுள் சத்தியமாக தான் இந்தியாவுடன் தோழமை பாராட்டுவேன் என்று பிரமாணம் செய்திருந்தார். மேனனிடம் இருந்து செய்தி வந்ததும் , புஷர் உடனே ராஜேந்திர சிங்கை அழைத்தார். அவரும் ஜெனரல் செலாத்ரிக்கு தகவல் கொடுத்து , மறுநாள் விடியல் மூன்று மணிக்கு முற்றுகையிட உத்தரவிட்டார். மாலை எழு மணிக்கு புஷர் கராச்சியில் இருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அப்பேச்சு பிரெஞ்சு மொழியில் இருந்தது.

மறுநாள் பத்து மணிக்கு மேனன் புஷர் அறைக்குச் சென்றாற். போர் விவரங்களைக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என நினைத்து, புஷர் மேனனிடம் தகவல்களைக் கொடுக்க ஆரம்பித்தார். மேனன் அவரை இடைமறித்து , "அதெல்லாம் எனக்குத் தெரியும் ; நீங்கள் நேற்று மாலை பாகிஸ்தான் கமாண்டருடன் பேசினீர்களா? " என்று கோபமாகக் கேட்டார். புஷருக்கு முகம் வெளிறி விட்டது.

" என்ன வி பி, நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடது என்கிறீர்களா ? "

: நட்பு முறையிலா அப்பேச்சு நடந்தது ?"

" நீங்கள் சந்தேகப் படுகிறீர்களா ? "

" நீங்கள் பிரென்சு மொழியில் பேசினீர்களா? "

" ஓஹோ, நீங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா?"

" ஏன் , தேவையென்றால் அப்படிச் செய்யக் கூடாதா? நிஜமாகவே நேற்று நீங்கள் பேசினது நட்புறவுப் பேச்சுத்தானா? "

" நிச்சயமாக ." ?

வி பி மேனன் ஒரு பேப்பரை புஷரிடம் நீட்டினார் அது முந்தய நாள் மாலை நிகழ்ந்த பிரெஞ்சுப்பேச்சின் பிரதி அதோடு அதன் ஆங்கில மொழியாக்கமும் இருந்தது.. அதில் :

ஹைதராபாத் மீது போர் தொடுப்பு இன்றிரவு நடக்க இருக்கிறது. அது பல நாட்கள் நடக்காது. அதற்கு முன் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றாள் உடனே செய்யுங்கள்

பாகிஸ்தான் கமாண்டர் " நன்றி. லியாகத் அலிகானிடம் சொல்கிறேன். ஜின்னா ப்டுத்தப்டுக்கையாக இருக்கிறார்.

புஷர் : என் கடமையை முடித்த பிறகு நான் உன் கையில் இருப்பேன் "

தொலைபேசி ஒட்டுக்கேட்டதால் கோபம் கொண்டவரைப் போல பாசாங்கு செய்த புஷர் , அதைப் படித்ததும் வியர்த்து விறுவிறுத்துப் போனார். மேனனைப் பார்த்து பரிதாபமாக, " இப்போ என்ன செய்வது வி பி , நான் தப்பு பண்ணி விட்டேன் . மன்னியுங்கள் " என்றார்.

மேனன் , " நீங்கள் பைபிளின் மேல் கை வைத்து, கடவுள் சாட்சியாக இந்தியா மீது தோழமை பாராட்டுவேன் " என்று பிரமாணம் செய்தீர்களா இல்லையா? "என்று கேட்டார்.

புஷர் :" வி பி என்னைத் துன்புறுத்தாதீர், இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் செய்கிறேன் நமது நெடுநாள் நட்பின் மீது ஆணையாக என்னைக் காப்பாற்றுங்கள் "

" நான் சொந்த காரணங்களுக்காகவும் , உடல் நிலை காரணமாகவும் ராஜினாம செய்கிறேன். இதை உடனடியாக ஏற்றுக் கோள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன் " என்ற கடிதத்தை புஷரிடமிருந்து மேனன் பெற்றார். புஷர் உடனேயே சென்றும் விட்டார். ஜெனெரல் கரியப்பா இந்திய ராணுவ உயர் அதிகாரியானார்

நன்றி ; எல் கே அத்வானி

நன்றி தமிழில் ; ராஜ கோபாலன்

Leave a Reply