மத்திய பிரதேசத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் , சிறந்த மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படவுள்ளதாக பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசமாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக.,வின் தேர்தல் அறிக்கை போபாலில் நேற்றுவெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கை:

முதல்வர் சிவராஜ்சிங், மக்களவை எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநில பா.ஜ.க தலைவர் நரேந்திரசிங் தோமர் மற்றும் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் விக்ரம்வர்மா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் சிவராஜ்சிங், பேசியதாவது இளைஞர்கள் மாநிலத்தில் பெருமளவில் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றார்.

சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டச் சலுகைகள், சிறந்த மாணவர்களுக்கு மடிக் கணினி அளிக்கப்படும். உணவுப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு சலுகை விலையில் அரிசி, கோதுமை, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிலோ ஒருரூபாய்க்கு வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இலவசவீடுகள் கட்டி தரப்படும், அனைத்து கிராமங்களும் நகர்பகுதியில் இணைக்கும்படி 100 சத போக்குவரத்துக்கு உறுதி செய்யப்படும். விவசாயிகளுக்கு கவர்ச்சிகர இன்சூரன்ஸ் திட்டம், விவசாயகிகளுக்கு காப்புறுதி திட்டம், வேளாண்பயிர்கள் அழிவைசந்தித்தால் அதற்கு அதிக பட்ச நிவாரணம் தர திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் சிவராஜ் சிங் கூறினார்.

Leave a Reply