இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரதரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்காதது ஏன்?’ என்று மாநிலங்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், சச்சின் டெண்டுல் கருக்கும், விஞ்ஞானி சிஎன்ஆர். ராவுக்கும் பாரதரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில்,

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு ஏன் பாரதரத்னா வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பவிரும்புகிறேன். சத்தீஸ்கர் மாநிலம் அமைவதில் அவர் முக்கியபங்கு வகித்தார். இந்தியாவின் மிகப்புகழ்பெற்ற பிரதமராக விளங்கிய அவர். வரும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வருமானால், அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்படும். பாரதரத்னா விருது வழங்குவதில் (நேரு) பரம்பரையை தாண்டி காங்கிரஸ் தலைவர்கள் சிந்திப்பதில்லை” என்று கூறினார்.

Leave a Reply