வீடு தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற புனித பாதயாத்திரை மூலம் தமிழக மக்கள் அனைவரையும் அவர்களின் வீடு தோறும் சென்று சந்திக்க இருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தன்னலமற்ற தொண்டாலும் நேர்மையாலும் ஒழுக்கத்தாலும் கடின உழைப்பாலும் நாடு முழுதும் உள்ள கோடான கோடி இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் பொது மக்களையும் கவர்ந்து உள்ள திரு.நரேந்திரமோடி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள்.

திரு. நரேந்திரமோடி அவர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கும் முழு ஆதரவு தர முன் வந்துள்ள தமிழக மக்களுக்கு நமது மனப்பூர்வமான் நன்றிகளை தெரிவிப்பது நமது கடமையாகும். அந்த நன்றியை வெறும் வார்த்தைகளால் முடிக்காமல் அவர்கள் வீடுதோறும் சென்று அவர்தம் பாதம்பணிந்து நன்றி பகர்வதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நான் கருதுகின்றேன்.

எனவே தான் தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் வீடு தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற இப்புனித பாதயாத்திரையை தகுதி நிறைந்த தங்கள் தலைமையில் நடத்த திட்டமிட்டோம்.

இப்புனித பாதயாத்திரையை தாங்கள் மேற்கொள்ளும் போது தங்கள் உருவத்தில் திரு.நரேந்திரமோடி அவர்களே தங்கள் வீட்டை தேடி வருவதாக ஒவ்வொரு தமிழரும் மகிழ்ச்சி கொள்வார்கள். இப்பாதயாத்திரையை தாங்கள் பூர்த்தி செய்யும் போது தங்கள் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்லை தாங்கள் தாண்டுவீர்கள் என்பது உறுதி. அத்துடன் தாங்கள் தகுதி நிறைந்த ஒரு தலைவராகவும் உயர்வீர்கள் என்பதிலும் எந்த ஐயப்பாடும் இல்லை.

பாரளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த பாதயாத்திரை தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு புத்துணர்ச்சியும் புது எழுச்சியும் தரும் என்பதோடு, தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்த பெருமைக்குரிய தலைவர்களில் தாங்களும் ஒருவராக உருப்பெருவீர்கள் என்பது உறுதி.

நாம் திட்டமிட்டதிற்கும் மேலாக சிறப்புற நடைபெற ௨ள்ள தங்கள் நடைபயணம் முழு வெற்றிகரமானதாக அமைய அன்னை பராசக்தியின் அருள் தங்களுக்கு கிட்ட பிராத்திக்கின்றேன். சரித்திரம் படைக்க நடைபயணம் துவக்கி ௨ள்ள தங்களுக்கு எனது சார்பிலும், தமிழக பாரதீய ஐனதா கட்சி சார்பிலும் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் தாயகப்ணியில்;

பொன். இராதாகிருஷ்ணன்
தலைவர் தமிழக பாரதீய ஐனதா கட்சி

Leave a Reply