அன்புடையீர்; வணக்கம் பாரதீய ஜனதா தொண்டர்களின் அயராத உழைப்பாலும் நமது நாட்டின் நம்பிக்கை திரு.வாஜ்பாய் அவர்கள் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையாலும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் நிகழ்த்திய அணுகுண்டு சோதனை நான்கு வழி சாலை. கிராம இணைப்பு சாலை, அனைவருக்கும் செல்போன் வசதி, விவாசயம் முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், பெண்கள் சுயஉதவி குழு வீடுகளுக்கு தடையற்ற கேஸ் இணைப்பு, அயல் நாடுகளான சீனா, அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளுடன் நட்புறவு, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு, இந்துய தமிழ் மீனவர் பாதுகாப்பு, காங்கிரஸ் ஆட்சியில் அயல் நாடுகளில் வாங்கி குவித்த கடன் அடைத்தல், போன்ற பல சாதனைகளை 6 ஆண்டுகளில் நிகழ்த்தி உலக நாடுகள் நம் நாட்டை வியந்து பார்க்க வைத்தார்.

ஆனால் தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு இலஞ்சம், ஊழல் விலைவாசி உயர்வு, சுவிஸ் வங்கி கருப்பு பணம், வேலைவாய்ப்பினமை பெண் கொடுமகள், தொழில் முடக்கம், விவசாய தளர்ச்சி, சீன நாட்டின் ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானின் அச்சுருத்தல், இலங்கை படுகொலை இந்திய தமிழ் மீனவர்களின் சித்திரவதை, போன்று நிர்வாக திறமை இன்மை,

பல தவறுகளை செய்தும் தவறுகளை தடுக்க தவறியும் உள்ள காரணத்தால் நமது நாடு மிகமோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து நமது நாட்டை காப்பாற்றுவது நமது கடமை என்று கோடான கோடி இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், பெண்களும் குடும்பத்தார்களும் முடிவெடுத்து உள்ளார்கள். இவர்கள் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களின் ஆட்சியின் சாதனைகளை இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் வியந்து பேசுகின்றன.

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த சிறு வயதில் ஒரு டீ விற்கும் பையனாக வாழ்க்கையை துவக்கி தன் தாயாருக்கும் குடும்பத்திற்கும் உழைத்த திரு.நரேந்திரமோடி அவர்கள் தன் வாழ்க்கை முழுவதும் நம் நாட்டில் வாழும் ஏழை எளிய குடும்பங்களில் முன்னேற்றத்திற்காக அமைய வேண்டும் என்று திருமணமே செய்து கொள்ளாமல் பொது வாழ்வில் கடினமாக உழைத்து இன்று பிரதம மந்திரி வேட்பாளராக உயர்ந்துள்ளார்.

திரு.நரேந்திரமோடி அவர்களின் திறமை நேர்மை ஒழுக்கம் சுயநலமற்ற தன்மை இவற்றை ஏற்றுக் கொண்ட இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்களும் திரு.நரேந்திரமோடி அவர்களை நாட்டின் வருங்கால பிரதமராக முழுமையாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.

மோடி அவர்களை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வரும் பாரளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் தமிழர் வீடுதோறும் பாதயாத்திரையாக வருகை தருகிறார்கள்.

வீடுதோறும் மோடி என்று இப்போது யாத்திரை மூலம் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றமைக்கு நாங்கள் உள்ளம் மகிழ்கிறோம். திரு.நரேந்திரமோடி அவர்களுக்கும் தாமரைச் சின்னத்தில் தொடர்ந்து தாங்கள் ஆதரவு தரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் தாயகப்ணியில்;

பொன். இராதாகிருஷ்ணன்
தலைவர் தமிழக பாரதீய ஐனதா கட்சி

Leave a Reply