உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்.என்ற வள்ளுவன் வாய்மொழி பொய்த்து போய் உலகம் வாழ உழுது பயிர் செய்து கொடுத்த உழவர் சமுதாயம் இன்று நீர் இழந்து நிலம் இழந்து நிலை குலைந்து தாழ்ந்து போனதற்கு யார் காரணம்?

ஒன்றும் அறியா மதியே முதலாய் கொண்ட திடீர் அரசியர் தலைவர்கள் தோன்றி மக்களை மயக்கி வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்த 5 ஆண்டு காலத்திற்குள் அடுக்கு மாடிகளை கட்டி அளப்பறிய சொத்துக்களுக்கும் உடமைதாரராக மாறி உலகை ஏமாற்றி பிழைப்பதற்கு யார் காரணம்?

அன்பிற்குறிய விவசாய பெருங்குடி மக்களே மேலே கேட்கப்பட்ட 2 கேள்விகளும் விடை எது என்றால், முதலாவது கேள்வியின் விடை இரண்டாவது கேள்வியில் உள்ள அரசியல்வாதி. இரண்டாவது கேள்விக்கு விடை எது என்றால் முதலாவது கேள்வியின் நாயகனான விவசாயிகள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாறுக்கும் இருக்க முடியாது.

நாடு விடுதலை பெற்றபோது கிராமம் சார்ந்து விவசாயத்தை சார்ந்த முன்னேற்றத்தை கொள்ள வேண்டுமென்றும் கிராம ராஜ்யமே ராம ராஜ்யம் என்றும் அண்ணல் காந்தியடிகள் விரும்பினார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் வந்தவர்கள் விவசாயிகளை புற்ம்தள்ளிய காரணத்தினால் கிராமம் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் நலிந்து போய் விவசாயிகள் பிழைப்புக்காக கிராமத்தை விட்டு நகரங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்திய கலாச்சாரமும், கிராமத்தின் தொன்மையும் பழைமைவாதம் என்று புத்தி புகட்டப்பட்ட காரணத்தால் நகரவாசிகள் எதை செய்தாலும் புத்திசாலித்தனமான ஒன்றாக கிராம மக்களிடமும் விவசாயிகளிடமும் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதன் காரணமாக கல்வி கற்ற கிராமத்து இளைஞர்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களும் நமது பாரம்பரியமான விவசாயத்தை நம்பி தொழில் செய்வது அநாகரிகம் என்ற நிலை உருவாகி உள்ளது. மற்றொரு புறத்தில் விவாசாயம் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் உரம் விலை ஏற்றம்,விதை ஏற்றம்,ஒரு முறை மட்டு்மே பயன்படுத்தும் BT விதை ஆதி்க்கம் பாசனம் வசதி இல்லாமை விவசாய தொழிலாளர்கள் இல்லா நிலை, கூலி ௨யர்வு, விளைய வைத்த பொருளுக்கு போதிய விலை இல்லாமை போன்ற பல காரணங்களாலும் விவசாய ம் செய்வதை விட விலை நெல் அரிசி வாங்கி சாப்பிடுவது இலாபகரமானது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டார்கள்.

மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற முதுமொழிக்கு ஏற்ப ஆட்சி அதிகாரத்தில் வருவோர் விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்க்க முடியும் என்பதும் நம்நாட்டில் நடந்துள்ளது.

தனக்கென்று எதுவும் வைக்காமல் தாய் நாட்டிற்க்காக தன்னை அர்பணித்து பணிபுரிந்த திரு.வாஜ்பாய் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்த ௨டனடியாக நாட்டின் வருமானத்தில் 58% விவசாய முன்னேற்றத்திற்க்காகவும், கிராம முன்னேற்றத்திற்காகவும் தர முன்வந்தார்கள். எல்லா குக்கிராமங்கள் கூட பிரதான சாலையுடன் இணைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை தாங்களே சந்தைக்கு கொண்டு சென்று தாங்களே விற்கும் தகுதியை கிராமச்சாலை திட்டத்தின் மூலம் செயல்படுத்தினார்கள். விளைய வைத்த பயிர் கருகினாலோ, அழுகினாலோ அவ்விழப்பை ஈடு செய்ய பயிர் காப்பீட்டுத்திட்டத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்கள்.

இடைத் தரகர்கள் கொள்ளையை தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள். பதுக்கல் தடுக்கப்பட்டு சந்தைகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டது. தமிழக விவசாயிகளின் பாசன நீர்த் தேவையை பூர்த்தி செய்ய கங்கையையும், காவிரியையும் இணைக்கும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தார்கள். காவிரி பிரச்சினைக்காக தானே நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நதி நீர் பெற்று தந்தார்கள்.

கிராம பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய உதவிக் குழுக்களைக் கொண்டு வந்ததோடு, ஆண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார்கள். அனைத்து கிராம குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தை உருவாகினார்கள். இது போன்று எண்ணிலடங்கா திட்டங்களை கொண்டு வந்த திரு. வாஜ்பாய் அரசு 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

ஒருவர் செய்த நல்ல காரியங்களை கணக்கில் எடுக்காமல் சிறு அரசியல் ஆதாயங்களுக்காகவோ இலவசங்கள் போன்ற தற்காலிக இலாபங்களுக்காகவும் அல்லது தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியை ஆதரித்தே தீர வேண்டுமென்ற ஆவேசத்தின் காரணமாகவும் சாதி, மதம், மொழி என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்ற சிறு காரணங்களை மனதில் கொண்டும் தேர்தலில் வாக்களிக்க மக்கள் முன்வந்துவிட்ட காரணத்தினால் தன்னலம் கருதாத அரசியல் தலைவர்கள் அரசியல் சூறைக்காற்றில் அடித்துத் தள்ளப்படுகிறார்கள்.

இன்று நம் மக்களுக்கும், நம் நாட்டிற்கும் தேவை உறுதியான , திறமையான, தன்னலமற்ற, நேர்மையான தன்னையே மக்களுக்கு அற்பணிக்கும் உள்ளம் நிறைந்த பிரதமர் மட்டுமே. அந்த வகையில் இன்று நீங்கள் அலசி ஆராய்ந்து பார்த்தால் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நிகராக இந்தியாவில் எந்த தலைவரும் ஒப்பிட முடியாத அளவுக்கு அவர் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறார்.

திரு.நரேந்திர மோடி அவர்கள் நம் நாட்டை வணங்கி மக்களுக்காக உண்மையாக உழைத்த தேசத் தலைவர்களை கவுரவப்படுத்துவது தனது தலையாய கடமையாக கருதுகிறார். அந்த வகையில் மிகச் சிறந்த தேசபக்தரும் அறிவாளியும், படிப்பாளியும், சுதந்திரப் போராட்ட தியாக வேள்வியில் தன்னையே அற்பணித்தவரும், கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்து அழிக்கப்பட்ட சோமநாதபுரம் ஆலயத்தை மீண்டும் எழுப்பியவரும், நமது நாட்டின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆங்கிலேயர்களால் தனித்தனி நாடாகப் பிரித்துப்பிரித்து

வழங்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நாடுகளை ஒருங்கினைத்து இன்றைய இந்தியாவை ஒருங்கிணைத்து தந்தவரும், காஷ்மீரதை கபளீகரம் செய்யவந்த பாகிஸ்தானை துரத்தியடித்து இந்தியாவில் காஷ்மீரத்தை இணைத்தவருமான இரும்பு மனிதர் திரு.சர்தார் வல்லபாய் படேல் அவர்களை திரு.நரேந்திரமோடி அவர்கள் என்றும் வணங்கி வாழ்த்தி வருகிறார்.

நாளையே பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் வெற்றிபெற்று ஆட்சியில் அமரபோவது திரு.நரேந்திரமோடி அவர்கள் தான் என்ற நிலையில் அவர் திரு.சர்தார் வல்லபாய் படேலுக்கு 162 மீட்டர் உயரத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய சிலை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்.

இரும்பால் அமையவிருக்கும் இரும்பு மனிதரின் சிலையை வடிவமைக்க இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் விவசாயிகள் பயன்படுத்திய கலப்பையின் கொலுவை சேகரித்து அதன் மூலம் இரும்பு மனிதர் சிலையை வடிக்க திரு.மோடி அவர்கள் முடிவு எடுத்து உள்ளார்கள்.

திரு.நரேந்திரமோடி அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவை விவசாயம் மற்றும் விவசாயிகளை அடிப்படையாகக்கொண்டு தான் தமது ஆட்சி அமையும் என்பதற்கான கட்டியமாக நாம் கருதுகிறோம். எனவே காங்கிரஸ் அரசின் தவறுகளிலிருந்து விவசாய்யிகளை காப்பாற்ற கிராமத்தையும் விவசாயத்தையும் முன்னிலைப்படுத்த உள்ள திரு.நரேந்திரமோடி அவர்கள் துவக்கவுள்ள திரு.வல்லபாய் படேல் சிலையமைப்பிற்கு தாங்கள் தரும் முழு ஆதரவு தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மாபெரும் விவசாயிகளின் ஒற்றுமையை ௨ருவாக்கும் என நான் நம்புகிறேன்.

எனவே பாரதீய ஐனதா கட்சி சார்பில் அமைக்கப்படும் சிலை அமைப்பு குழுவிற்க்கும், சிலைக்கான கொழு எடுக்கும் நிகழ்ச்சிக்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு தந்து நமது நாட்டின் பாரம்பரியம், பண்பாடு சார்ந்து கிராம வளர்ச்சியோடு, விவசாயம் தழைத்து நாடு சிறக்க நல்லாட்சி அமைய ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் தாயகப்ணியில்;

பொன். இராதாகிருஷ்ணன்
தலைவர் தமிழக பாரதீய ஐனதா கட்சி

Leave a Reply