பிரதமரின் முடிவு முட்டாள் தனமானது என்று விமர்சித்தது பாஜக அல்ல.. உங்கள் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்தான் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

ம.பி., மாநில சட்டசபை தேர்தலையொட்டி சத்ராபூர் என்ற இடத்தில் மோடி பேசியதாவது: மத்திய பிரதேசத்தில் 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சிகாலத்தில் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எத்தனை பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டன? எங்கே அவற்றைகாணோம்? அவையெல்லாம் இடிந்துபோய்விட்டனவா? நீங்கள் செயய்வே இல்லையே.. ஆனால் பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக வளர்ச்சிதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ம.பி., மாநில நெடுஞ் சாலைகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலேயே தெரியும்.. இந்த மாநிலத்தை மத்திய அரசு எப்படி சீர்குலைத்திருக்கிறது என்பதை.. இம்மாநில அரசு மேற்கொண்டிருக்கும் வளர்ச்சித்திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.. சோனியாஜி, இளவரசர்ஜி ..உங்களால் அதைப்பற்றி விவாதிக்க முடியுமா? அதுபற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

பிரதமர் மன்மோகன் சிங் சொல்கிறார்.. அரசியலின் தரம் தாழ்ந்து போய்விட்டது.. அப்படி தரம்தாழ்ந்து பேசியது உங்கள் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்தானே.. உங்கள் முடிவை அவர் முட்டாள் தனமான முடிவு என்று அல்லவா அவர் விமர்சனம்செய்தார்..

பா.ஜ.க., வினர் மத்திய பிரதேச வளத்தை திருடி விட்டதாக காங்கிரஸ் சொல்கிறது.. ஆம் நாங்கள் திருடிவிட்டோம் தான்.. நாங்கள் திருடியது காங்கிரஸ்கட்சியின் தூக்கத்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. புந்தல் கண்ட் பகுதிக்கு ஒதுக்கிய நிதியை மாநில அரசு சிறப்பாக பயன் படுத்தியது என்று பாராட்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்தானே.. மத்திய பிரதேசத்தில் நீங்கள் வளர்ச்சியை காண்கிறீர்கள்.. இந்தியா முழுவதும் வளர்ச்சியைக்காண பா.ஜ.க.,வுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

Leave a Reply